Site icon TNPSC Academy

TNPSC Current affairs in Tamil Feb 23, 2017

TNPSC Current affairs in Tamil Feb

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current affairs in Tamil Feb 23, 2017 (23/02/2017)

Download as PDF

 

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்

அருண்-3 நீர்மின் திட்டம்

மத்திய அமைச்சரவை நீர்மின் திட்டம் – அருண்3-ற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத் திட்டம் பற்றி:

கிழக்கு நேபால் Sankhuwasabha மாவட்டத்தில் உள்ள அருண் நதிக்கரையில் இத் திட்டம் அமைந்துள்ளது.

இந்த திட்டம் ஆனது இந்தியாவிற்கு உபரி சக்தியினை வழங்கவும் நாட்டில் மின்னாற்றல் இருப்பினை வலுப்படுத்தும் நோக்கிலும் மேலும் நேபால் உடனான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கிலும் துவங்கப்பட்டுள்ளது.

நேபாலில் உள்ள Dhalkebar இருந்து இந்தியாவில் முசாபார்பூர் நகர் மூலம் மின்சக்தி பரிமாற்றம் செய்துகொள்ளப்படும்.

இந்தியா மற்றும் நேபால் நாடுகளில் இருந்து சுமார் 3000 பேர் இந்த திட்டத்தின் கட்டுமான வேலைவாய்ப்புகளுக்காக பணியாற்ற இருக்கின்றனர்.

_

 

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்

Antyodaya எக்ஸ்பிரஸ்

விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான ரயில்பெட்டிகளுடன் பொது மக்களுக்காக ஒரு புதிய முழுமையாக முன்பதிவு செய்யப்படாத ரயில், Antyodaya எக்ஸ்பிரஸ் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மூலம் தொடங்கப்பட்டது.

முதல் Antyodaya எக்ஸ்பிரஸ் மும்பை மற்றும் டாடா நகர் இடையே இயங்குகிறது மற்றும் இரண்டாவது விரைவில் எர்ணாகுளம் மற்றும் ஹவுரா இடையே இயங்க உள்ளது.

_

தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்

சறுக்கு கை பந்து – Hand ball on Skates உலக சாம்பியன்ஷிப்

இந்திய ஆடவர் அணி ரோல் பால் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரானை தோற்கடித்தன் மூலம் பட்டத்தை வென்றது.

பெண்கள் பிரிவிலும் ஈரானை தோற்கடித்து இந்தியா போட்டித் தொடரை வென்றது.

ரோல் பால் பற்றி:

ரோல் பால் ஆனது ரோலர் சறுக்கு, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளின் கலவையாக உள்ளது.

அது 2003 ல் ஒரு இந்திய விளையாட்டுத்துறை ஆசிரியர் ராஜு தாபாதே (Raju Dabhade) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

_

தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்

2019ன் இணைந்த துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது

இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் (NRAI), 2019ன் இணைந்த துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என அறிவித்தது.

ஒருங்கிணைந்த இந்த உலக கோப்பையானது 2020ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு தகுதி நிகழ்வு ஆகும்.

ஷாட் கன், துப்பாக்கி மற்றும் பிஸ்டல் போன்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

_

தலைப்பு : புவியியல் – புவியியல் அடையாளங்கள்

நாசா 7 பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடித்துள்ளது

அளவில் பூமியைப் போன்று இருக்கும் ஏழு கோள்களின் அணிவகுப்பை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அக்குவாரியஸ் விண்மீன் கொத்தில், மங்கலாகக் காட்சியளிக்கும் ‘டிராப்பிஸ்ட்-1’ (Trappist-1)என்ற சிறிய விண்மீனைச் சுற்றிவருபவை இந்தக் கோள்கள்.

உயிர் வாழ்க்கைக்கு உகந்த தட்பவெப்ப நிலையையும் நீரையும் கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை இந்தக் கோள்கள் கொண்டிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

சூரியக் குடும்பத்துக்கு அப்பால் உயிர் வாழ்க்கையின் சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வானியலாளர்களின் நம்பிக்கையை இந்தக் கண்டுபிடிப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

ஒரே விண்மீனைச் சுற்றி, பூமியின் அளவைப் போல் இவ்வளவு கோள்களைக் கண்டுபிடித்திருப்பது இதுதான் முதல் முறை.

டிராப்பிஸ்ட்-1 விண்மீன், பூமியிலிருந்து சுமார் 39 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது என்பதால் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது குறித்த நம் தேடலுக்கு முக்கியமான இலக்காக ஆகியிருக்கிறது.

வியாழனை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் இந்த விண்மீன் நமது சூரியனைவிட 2,000 மடங்கு குறைந்த அளவில் ஒளி வீசுகிறது.

முக்கிய குறிப்புகள்:

உருவத்தில் மட்டுமல்ல மற்ற அம்சங்களிலும் அந்தக் கோள்கள் பூமியைப் போல இருக்கின்றன. அவற்றின் சுற்றுப்பாதை எவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்கிறது என்பது வியப்பை அளிக்கிறது.

நமது சூரியனுக்கும் அதற்கு மிக அருகில் உள்ள புதனுக்கும் இடையிலான தொலைவைவிட டிராப்பிஸ்ட்-1 விண்மீனுக்கும் அதன் ஏழாவது கோளுக்கும் இடையிலான தொலைவு ஆறு மடங்கு குறைவானது.

கண்டுபிடிப்பு:

டிராப்பிஸ்ட்-1 விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள் சுற்றுவதைக் கடந்த ஆண்டு வானியலாளர்கள் கண்டறிந்தார்கள்.

நாஸாவின் ‘ஸ்பிட்ஸர்’ அண்டவெளித் தொலைநோக்கி அந்த விண்மீனை 21 நாட்கள் கூர்ந்து கவனித்திருக்கிறது.

பிற விண்நோக்கங்களிலிருந்து (Observatory) வந்த தரவுகளையும் சேர்த்துவைத்துப் பார்த்தபோது டிராப்பிஸ்ட்-1 விண்மீனை மொத்தம் ஏழு கோள்கள் சுற்றி வருவது தெரிந்தது.

விண்மீனைச் சுற்றிவரும்போது அந்தக் கோள்கள் எந்த அளவுக்கு விண்மீன் ஒளியை மறைக்கின்றனவோ அதை வைத்து அவற்றின் அளவுகள் கண்டறியப்பட்டன.

அந்தக் கோள்களுக்கு இடையிலான இழுப்பு விசையையும் விலக்குவிசையையும் வைத்து அந்தக் கோள்களின் நிறையைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current affairs in Tamil Feb and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in Tamil Feb and in English on your Inbox.

 

Read TNPSC Current affairs in Tamil Feb and in English. Download daily TNPSC Current affairs in Tamil Feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in Tamil Feb and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version