[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in Tamil Feb 22, 2017 (22/02/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
இயக்குநர் ஆண்டனி மித்ரா தாஸ் இறந்தார்
தமிழ், மலையாளம் மற்றும் சிங்களம் மொழிகளில் படங்களை இயக்கிய மற்றும் இரண்டாம் உலக போரின் போது ராணுவத்தில் பணியாற்றிய 103 வயதான இயக்குநர் ஆண்டனி மித்ரா தாஸ் இறந்தார்.
அவரை பற்றி:
மதுரையில் பிறந்த அவர், படங்களில் அவரது பேரார்வத்தின் மூலம் திரைப்படம் தயாரித்தல் நோக்கி அவரது வாழ்க்கை நகர்த்தினார்.
அவர் 1941 ல் அவரது முதல் படமான Dayalanயை இயக்கினார்.
அவரது படங்கள்:
Pizhaikkum vazhi (தமிழ்), Avakashi (மலையாளம்), ஹரிச்சந்திரா (மலையாளம்).
–
தலைப்பு : இந்தியா மற்றும் அதன் சர்வதேச உறவுகள்
இந்தியா மற்றும் ருவாண்டா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்
இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் ருவாண்டா விஜயத்தின் போது இந்தியா மற்றும் ருவாண்டா நாடுகளுக்கிடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.
முக்கிய குறிப்புகள்:
ஒப்பந்தம் தொடர்பான சில குறிப்புகள் –
வான் சேவைகள் – ஏப்ரல் மாதத்தில் கிகாலி – மும்பை இடையே ருவண்டா ஏர்வேஸ்ஸின் நேரடி விமான சேவைகள் தொடங்க உள்ளது.
ருவாண்டாவில் வளர்ச்சி மையம் அமைத்தல்.
இராஜதந்திர வேலைகள் மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு நுழைவு விசா விலக்கு.
_
தலைப்பு : புவியியல் – சுற்றுச்சூழல் மற்றும் புதிய இனங்கள் கண்டுபிடிப்புகள்
சிறிய தவளை இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன
விஞ்ஞானிகள் சிறிய தவளைகள் இனங்களில் நான்கு புதிய இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை அளவில் மிகவும் சிறியதாக கட்டைவிரலை விட சிறியதாக இருக்கும்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளைகள் பின்வருமாறு : அதிரப்பள்ளி இரவு தவளை, சபரிமலை இரவு தவளை, ரெட்கிளிஃப் இரவு தவளை மற்றும் கடலர் இரவு தவளை.
இந்த தவளைகள் பற்றி:
ஆராய்ச்சியாளர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனங்கள் ஏழு புதிய “நைட் தவளைகள்” வரிசையில் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் தனித்து காணப்படும் இந்த இரவு தவளைகள் Nyctibatrachus பேரினத்தை சேர்ந்தவை.
மற்றும் இந்த தவளைகள் சுமார் 70 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த தொன்மைவாய்ந்த ஒரு பண்டைய கால பிரதிநிதித்துவம் வாய்ந்தது.
இந்த கண்டுபிடிப்பு மூலம் அறியப்பட்ட Nyctibatrachus இனத்தின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இதன் அளவு 20% (18 மி.மீ.) உள்ள மிக சிறிய அளவில் உள்ளன.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
Cyber Swachhta Kendra
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் மூலம் Cyber Swachhta Kendra தொடங்கப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த Cyber Swachhta Kendra, பொது சுத்தம் மற்றும் மால்வேர் பகுப்பாய்விற்க்காக தொடங்கப்பட்டது.
மேலும் M-Kavach மற்றும் Samvid என்ற மொபைல் பயன்பாடுகள், கணினிகளில் சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகளில் இருந்து பாதுகாக்க தொடங்கப்பட்டன.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in Tamil Feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in Tamil Feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in Tamil Feb and in English. Download daily TNPSC Current affairs in Tamil Feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in Tamil Feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]